• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கலாசார கொள்கையொன்றைத் தயாரித்தல்
- 2007 ஆம் ஆண்டில் முதற் தடவையாக தேசிய கலாசார கொள்கையொன்று தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், இந்த தேசிய கலாசார கொள்கையை மேலும் திருத்தி தேசிய கலை மற்றம் கலாசார கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காக 2017 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதற்கிணங்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கப்பட்ட தேசிய கலாசார கொள்கை யொன்றின் தேவை தற்போது எழுந்துள்ளது. இதற்கிணங்க, நடைமுறையிலுள்ள தேசிய கலாசார கொள்கையை மேலும் திருத்தி புதிய கொள்கையொன்றினைத் தயாரிப்பதற்கும் இதன் பொருட்டு சகல கலாசாரங்களையும் பிரதிநிதித்து வப்படுத்தும் விதத்தில் இந்த விடயம் தொடர்பில் பரந்துபட்ட அறிவுடன்கூடிய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்குமாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.