• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய பொலிஸ் தலைமையக கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல்
- தற்போது பொலி்ஸ் தலைமையகமானது யோர்க் வீதி மற்றும் சைத்திய வீதி என்பன இணையும் வீதியினை சுற்றி 100 வருடங்களுக்கு மேற்பட்ட மூன்று (03) பழைய கட்டடங்களில் நடாத்திச் செல்லப்படுகின்றதோடு, இந்த மனையிடத்தில் போதுமான இடவசதி இல்லாததன் காரணமாக சிவில் நிர்வாக அலுவலகமும் மேலும் சில பிரிவுகளும் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட கட்டடங்களில் நாடாத்திச் செல்லப்படுகின்றது. பொலிஸ் தலைமையக கட்டடத் தொகுதியை மிரிஹான பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்காக 2012 யூலை மாதம் 11 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதற்கிணங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்த நிலைமையின் கீழ் இலங்கை பொலிசுக்கு சொந்தமான பெப்பிலியான பிரதான வீதியில் இலக்கம் 142, பெல்லந்தோட்ட சந்தி, அத்திடிய வீதி, தெஹிவளை என்னும் முகவரியில் அமைந்துள்ள ஏக்கர் 44 றூட் 02 பேர்ச்சர்ஸ் 38.50 விஸ்தீரணமுடைய காணியில் பொலிஸ் தலைமையக கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பது மிகப் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க பொலிஸ் தலைமையக கட்டடத் தொகுதியை மிரிஹான பிரதேசத் திற்கு பதிலாக இலங்கை பொலிசுக்கு சொந்தமான குறித்த இந்த காணியில் நிர்மாணிப்பதற்கும் தேவைக்கு ஏற்றவாறு கட்டடங்களை வெவ்வேறு கருத்திட்டங்களாக இனங்கண்டு நிர்மாணிப்பதற்கான பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.