• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines Limited கம்பனிக்கு தரைக் கையாள்கை சேவை முகவர்களை தெரிவு செய்தல்
- SriLankan Airlines Limited கம்பனிக்கு பங்கொக் சர்வதேச விமான நிலையம் மற்றும் லண்டன் ஹீத்துரோ சர்வதேச விமான நிலையம் என்பவற்றிற்கான தரைக் கையாள்கை சேவை முகவர்களை தெரிவு செய்யும் பொருட்டு வரையறுக்கப்பட சர்வதேச கேள்வி கோரும் முறையினை பின்பற்றி பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மூன்று (03) வருட காலத்திற்கு பின்வரும் ஒப்பந்தங்களை கையளிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* பங்கொக் சர்வதேச விமான நிலையத்தின் தரைக் கையாள்கை சேவை ஒப்பந்தத்தினை M/s Bangkok Flight Services நிறுவனத்திற்கு கையளித்தல்.

* லண்டன் ஹீத்துரோ சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் மற்றும் விமான நடமாடும் மேலுயர்த்திகள் கையாள்கை சேவை ஒப்பந்தத்தினை M/s Dnata Limited நிறுவனத்திற்கு கையளித்தல்.

* லண்டன் ஹீத்துரோ சர்வதேச விமான நிலையத்தின் விமானச்சரக்கு கையாள்கை சேவை ஒப்பந்தத்தினை M/s Worldwide Flight Services (WFS) Ltd., நிறுவனத்திற்கு கையளித்தல்.