• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எரிபொருள் கொள்வனவு செய்யும் தவணைக்கால ஒப்பந்தங்களை வழங்குதல்
- 2021‑06‑01 ஆம் திகதியிலிருந்து 2022‑01‑31 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் பின்வருமாறு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு உரியதாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் விசேட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பின்வரும் தவணைக்கால ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2,700,000 +10/-5% பெரல் பெற்றோல் (92 Unl) இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை சிங்கப்பூர் M/s Swiss Singapore Overseas Enterprisess Pte. Ltd., கம்பனிக்கு வழங்குவதற்கும்.

* 1,120,000 +10/-5% பெரல் டீசல் (உச்ச சல்பர் நூற்றுவீதம் 0.05) முத்துராஜவெல SPM இடத்தின் ஊடாக தரையிறக்குவதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை சிங்கப்பூர் M/s Petrochina International (Singapore) Pte. Ltd., கம்பனிக்கு வழங்குவதற்கும்.

* 1,341,000 +10/-5% பெரல் பெற்றோல் (92 Unl) மற்றும் 459,000 +10/-5% பெரல் பெற்றோல் (95 Unl) இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை சிங்கப்பூர் M/s Petrochina International (Singapore) Pte. Ltd., கம்பனிக்கு வழங்குவதற்கும்.

* 1,120,000 +10/-5% பெரல் டீசல் (உச்ச சல்பர் நூற்றுவீதம் 0.05) கொழும்பு Dolphin Tanker Berth மற்றும் கொழும்பு முத்துராஜவெல SPM ஆகிய இரண்டு இடங்களின் ஊடாக தரையிறக்குவதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை சிங்கப்பூர் M/s Petrochina International (Singapore) Pte. Ltd., கம்பனிக்கு வழங்குவதற்கும்.