• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
32,000 Bevacizumab ஊசி மருந்து 100mg/4ml புட்டிகளை வழங்குவதற்கான கேள்வி
- சில புற்றுநோய் வகைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச போட்டிக் கேள்வி கோரப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 04 கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 32,000 Bevacizumab ஊசி மருந்து 100mg/4ml புட்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வியை M/s Memart Pharma (Pvt) Ltd. நிறுவனத்திற்கு 220.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.