• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெரணியகல மாலிபொட தோட்டத்தின் வீடமைப்புக் கருத்திட்டம்
- அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் தெரணியகல பிரதேசத்தில் நடாத்திய "கமசமக பிலிசந்தர" நிகழ்ச்சித்திட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாலிபொட சுற்றுப் பிரதேசத்திலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்புக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் 171 வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று அதிமேதகைய சனாதிபதி அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் உத்தேச வீடுகளும் உள்ளடங்கலாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 480 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்தினால் 500 மில்லியன் ரூபாவைக் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உத்தேச இந்திய கொடையின் கீழ் மாலிபொடயில் 171 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் முதலாவது கட்டமாக 60 வீடுகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்குமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.