• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மற்றும் சர்வதேச சட்ட தேவைகளுக்கு அமைவாக கடற்றொழில், நீரகவள மூலங்கள் திணைக்களம் சார்பில் முழுமையான படகு கண்காணிப்பு முறைமையொன்றைத் தாபித்தல்
- இந்து சமுத்திர Tuna ஆணைக்குழுவின் 15/03 ஆம் சமவாயத்தின் பிரகாரம் ஆழ்கடலில் பயணிக்கும் பல்தின மீன்பிடி படகுகளின் அமைவிடத்தை இனங்காணுதல், அனர்த்தங்களின் போது கண்காணிப்பதற்கும் மீட்பதற்குமான பணிகளை மேற்கொள்தல், பல்தின கடற்றொழில் படகுகளை பயன்படுத்தி கடல் மார்க்கமாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மற்றும் முறையற்ற கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு படகுகளை கண்காணிக்கும் முறைமையொன்றினை தாபித்தல் போன்றவை அத்தியாவசியமானதாகும். 2015 ஆம் ஆண்டில் கடற்றொழில், நீரகவள மூலங்கள் திணைக்களத்தின் கீ்ழ் பதிவு செய்யப்பட்டுள்ள 1250 பல்தின கடற்றொழில் படகுகள் சார்பில் செய்மதி தொழிநுட்பத்தினை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் படகு கண்காணிப்பு முறைமையயொன்று தாபிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்றொழில் படகுகளுக்கு மேலதிகமாக இத்தகைய 4,200 பல்தின கடற்றொழில் படகுகளுக்கு குறித்த உபகரணத்தினை பொருத்த வேண்டியுள்ளது. அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் 5.38 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களைக் கொண்ட கொடையினைப் பயன்படுத்தி புலம்பெயர்வோர் தொடர்பிலான சர்வதேச அமைப்பினால் மேற்கொள்ளப்படும் பெறுகை செயற்பாட்டின் ஊடாக இந்தப் படகு கண்காணிப்பு முறைமையினை பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.