• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் தெற்கு, அநுராதபுரம் வடக்கு பன்முக போக்குவரத்து நிலையங்கள் நிர்மாணிக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்
- அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மை நிதியத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் அநுராதபுரம் ஒன்றிணைந்த நகர அபிவிருத்தி கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அநுராதபுரம் நகரத்தில் கலாசார மரபுரிமைகளை பாதுகாத்து அங்குள்ள நகர்சார் சேவைகளையும் பொது இடங்களையும் விருத்தி செய்வது இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன்கீழ் அநுராதபுரம் புதிய வசுத்தரிப்பு நிலையத்தை விருத்தி செய்து, அதனை அநுராதபுரம் தெற்கு பன்முக போக்குவரத்து நிலையமொன்றாக அபிவிருத்தி செய்வதற்கும் அநுராதபுரம் பழைய வசுத்தரிப்பு நிலையம் மற்றும் தூர இடங்களுக்கு செல்வதற்கான சேவைகளை வழங்கும் வசுத்தரிப்பு நிலையம் என்பவற்றை குறித்த இந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அநுராதபுரம் வடக்கு பன்முக போக்குவரத்து நிலையமொன்றாக அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்தக் கருத்திட்டங்கள் காரணமாக பாதிக்கப்படும் 302 குடும்பங்களுக்கு பாதிப்பின் தன்மையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உரிய தகவுத்திறன்களின் கீழ் நட்டஈடு செலுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.