• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“Sinopharm மற்றும் Oxford-AstraZeneca (OAZ) தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
- COVID-19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஏற்றல் தவிர வேறு தீர்வொன்று இல்லாத நிலைமையின் கீழ் துரிதமாக தேவைப்படும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் மொத்த சனத்தொகையின் 60-70 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவில் தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, துரிதமாக 14 மில்லியன் Sinopharm மருந்தளவினை சீனாவில் இந்த தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் 01 மில்லியன் Oxford-AstraZeneca தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.