• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID-19 நோயாளிகள் சார்பில் சிகிச்சை சேவைகளை துரிதப்படுத்துதல்
- COVID மூன்றாம் அலையின் கீழ் இனங்காணப்படும் பெரும்பாலான நோயாளிகளில் கடுமையாக நோய்வாய்ப்படும் நிலைக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு ஒட்சிசன் வழங்குவதன் மூலம் மருத்துவ சிகிச்சை அளிப்பது அத்தியாவசியமானதாகும். இதற்கிணங்க கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள COVID நோயாளிகளுக்கு மருத்துவ ஒட்சிசன் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு துரிதமாக பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* முழு நாட்டையும் தழுவும் விதத்தில் மாகாண மட்டத்தில் இனங்காணப்படும் 25 வைத்தியசாலைகளில் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள COVID நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இயலுமாகும் வகையில் Wall Oxygen கருவிகளைக் கொண்ட விசேட உயர் சிகிச்சைப் பிரிவுகளைத் தாபித்தல்.

* வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருத்துவ ஒட்சிசன் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இனங்காணப்பட்ட தூரப் பிரதேசங்களில் அமைந்துள்ள 15 வைத்தியசாலைகளில் 15 ஒட்சிசன் பிறப்பாக்கல் இயந்திரங்களைத் தாபித்தல்

* மாவட்டம் ஒன்று சார்பில் 100 கொண்டுசெல்ல இலகுவான மருத்துவ ஒட்சிசன் பிறப்பாக்கல் இயந்திரங்கள் வீதம் 25 மாவட்டங்களில் இத்தகைய 2,500 ஒட்சிசன் பிறப்பாக்கல் இயந்திரங்களை வழங்குவதற்கும் இதன் மூலம் வைத்தியசாலைகளில் சிலிண்டர்கள் மூலம் ஒட்சிசன் வழங்கும் தேவையினைக் குறைத்தல்

* மருத்துவ ஒட்சிசன் சார்பில் அதிகரித்து வரும் கேள்வியினை நிறைவு செய்யும் பொருட்டு மாதாந்தம் 120,000 லீட்டர்கள் திரவ ஒட்சிசன் இறக்குமதி செய்து போதுமான பாதுகாப்பு கையிருப்பினை நாட்டில் பேணுதல்.