• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இறக்குமதி செய்யப்படும் நடமாடும் வேலைத்தள வாகனங்களை இரட்டை நோக்க வாகனங்களாக பதிவு செய்வதன் மூலம் சில வாகன இறக்குமதியாளர்கள் விசேட சார்பு நிலையினைப் பெற்றுக் கொள்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரசாங்க கணக்குகள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இரட்டை நோக்க வாகனங்கள் மற்றும் நடமாடும் வேலைத்தள வாகனங்கள் சார்பில் சமமான சுங்க வரியினை அறிவிடுவதற்கும் சமமான ஆயுட்காலத்தின் மீது இறக்குமதி செய்வதற்கு இடமளிப்பதற்கும் புதிய HS குறியீட்டினை அறிமுகப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகளை 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 2020‑04‑23 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெயிடப்பட்டுள்ளது. இவ்வாறு வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.