• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முல்லேரியாவில் அமைந்துள்ள கிழக்கு கொழும்பு ஆதார வைத்திய சாலையில் அனைத்து வசதிகளுடனான குருதி சுத்திகரிப்பு பிரிவு மற்றும் தொற்றா நோய்களை கண்டறியும் வசதியுடனான நாட்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலையத்தினை தாபித்தல்
- முல்லேரியாவில் அமைந்துள்ள கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையானது கொழும்பு மாவட்டத்தின் பெருமளவான மக்களுக்கு இரண்டாம்நிலை சுகாதார சேவை வசதிகளை வழங்குகின்றதோடு, மருத்துவ, அறுவை, பெண் மற்றும் பிரசவ, சிறுவர் ஆகிய அனைத்து பிரதான நிபுணத்துவ மருத்துவ சேவைகளும் இந்த வைத்தியசாலையின் ஊடாக தற்போது வழங்கப்படுகின்றது. அதேபோன்று தற்போது நடைமுறையிலுள்ள கருத்திட்டங்களின் கீழ் இந்த வைத்திய சாலைக்கு தேசிய ரீதியிலான பக்கவாத மத்திய நிலையம், இரண்டாம் மட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, புதிய வடிவிலான தீவிர சிகிச்சை பிரிவு, உருவகப்படுத்தல் நிலையம் போன்ற பிரிவுகளை புதிதாக தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக நாளொன்றில் 20 பேர்களுக்கு வசதியளிக்கக்கூடியவாறு 12 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களையும் தேவையான அறுவைசிகிச்சை உபகரணங்களுடான பூரண குருதி சுத்திகரிப்பு பிரிவொன்றையும் தொற்றா நோய்களுடான நோயாளிகளை கண்டறியும் வசதிகளுடனான நாட்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலையமொன்றை சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306 C1 என்பதன் ஊடாக வழங்கப்பட்ட கொடையினை பயன்படுத்தி இந்த வைத்தியசாலையில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சுக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306 C1 என்பதற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.