• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் தென் கொரியாவின் கொரிய தேசிய திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- திறந்த மற்றும் தொலைக்கல்வி, ஆற்றல் அபிவிருத்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம், ஆய்வுகூட வசதிகள் ஆராய்ச்சி மற்றும் வௌியீடுகள் அத்துடன் பதவியணியினரின் பரிமாறல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற துறைகள் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் தென் கொரியாவின் கொரிய தேசிய திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.