• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காப்புறுதி உரிமைகளை வழங்குதல்
- இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தொழிலாளர் காப்புறுதி காப்பீடு வழங்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் தொழிலாளர் ஒருவரின் மரணத்தின் போது 600,000/- ரூபாவும் முழுமையாக அங்கவீனமுறும் சந்தர்ப்பத்தில் 400,000/- ரூபா என்னும் உச்சத்தின் கீழும் நட்டஈடு செலுத்தப்படும். ஆயினும் இந்த தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் நிகழும் பல்வேறுபட்ட தொழில்துறை மற்றும் உள்ளக விபத்துக்கள், பல்வேறுபட்ட நோய்கள் அதேபோன்று முதலாளிமார்களினால் செய்யப்படும் அழுத்தங்கள், துன்புறுத்தல்கள் காரணமாக ஏற்படும் உள ரீதியிலானதும் ஆரோக்கிய ரீதியிலானதுமான பிரச்சினைகளுக்கு மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்தல் மற்றும் COVID - 19 போன்ற தொற்று நிலைமைகள் காரணமாக தொழில் இல்லாமற் போதல் போன்ற விடயங்களுக்கு எவ்வித காப்பீடுகளும் இல்லை. ஆதலால், இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்ற காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.