• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டு திறமுறை மற்றும் கொள்கை கட்டமைப்பு - Selendiva Investments (Pvt.) Ltd.
- அரசாங்கத்திற்குச் சொந்தமான உபசரணை சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அடங்கலாக முதலீடுகளை மீளக் கட்டமைத்து அவற்றின் செயற்திறனை விருத்தி செய்யும் நோக்கில் அரசுடமையான ஆதன அபிவிருத்தி கம்பனியொன்றைத் தாபிப்பதற்காக 2020 மார்ச் மாதம் 04 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கு அமைவாக திறைசேரிக்கு 100 சதவீத உரிமையுடன் Selendiva Investments (Pvt.) Ltd. கம்பனியைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான Canwill Holdings (Pvt.) Ltd., Hotel Developers (Lanka) PLC மற்றும் Hotels Colombo Ltd., ஆகிய கம்பனிகள் ஏற்கனவே Selendiva Investments (Pvt.) Ltd கம்பனியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. Selendiva Investments (Pvt.) Ltd கம்பனி அரசாங்கத்திற்குச் சொந்தமான இனங்காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முதலீடுகள் சார்பில் வசதிகளைச் செய்யும் பொருட்டு தனியார் - அரசாங்க கூட்டுத் தொழில்முயற்சி அடிப்படையில் முதலீட்டு வசதிகளை வழங்கும் கட்டமைப்பொன்றை திட்டமிட்டுள்ளதோடு, அதன்கீழ் 'கொழும்பு கோட்டை Heritage Square', 'நிலையான ஆதனங்களின் அபிவிருத்தி' மற்றும் 'அரசாங்கத்திற்குச் சொந்தமான உபசரணை பிரிவு' என்னும் மூன்று (03) முதலீட்டுப் பிரிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.