• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழகம் மலேசியாவின் Taylor's பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவு வகைகளின் அளவு, தன்மை சம்பந்தமான தொலைக்காட்சி விளம்பரத்துக்கு ஒன்பது (09) ஆசிய நாடுகளின் ஆண், பெண் பிள்ளைகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் மலேசியாவின் Taylor's பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக் கருத்திட்டத்திற்கு கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம் மலேசியாவின் Taylor's பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி வழங்கு கின்றது. இதற்கிணங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகள் சார்பில் தேவைப்படும் நிதி ஏற்பாடுகளாவன மலேசியாவின் Taylor's பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும். இதற்கிணங்க, உத்தேச சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.