• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் பொருளாதார நிலைமை, இலங்கை மத்திய வங்கியின் நிலைமை மற்றும் ஆண்டினுள் நிதிச் சபையினால் கொள்கை மற்றும் நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்கள் என்பவற்றை உள்ளடக்கிய அறிக்கையொன்றினை அடுத்த வருடம் ஆரம்பித்து 04 மாத காலத்திற்குள் நிதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இதற்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையானது 2021 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியன்று நிதி அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. நிதிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நிதி அமைச்சருக்கு இந்த ஆண்டறிக்கையினை சமர்ப்பித்து 14 நாட்களுக்குள் நிதி அமைச்சரினால் குறித்த ஆண்டறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். இதற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.