• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கரையோர நீர்பரப்பில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல்களுக்கான தேசிய ஒழுங்குறுத்துகை கட்டமைப்பு
- சுற்றுலா தொழில் சார்ந்த செயற்பாடுகளின் விருத்தியுடன் கப்பல் மூலம் பயணிகள் போக்குவரத்தும் சரக்குகள் கொண்டு செல்தலும் அதிகரித்துள்ளதன் காரணமாக கரையோரம் சார்ந்த வர்த்தக கப்பல்களுக்கான தேசிய ஒழுங்குறுத்துகை கட்டமைப்பொன்று இருக்கவேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, முன்னாள் அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுடன் இணைந்து துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஒத்துழைப்புடன் இத்தகைய ஒழுங்குறுத்துகை கட்டமைப்பொன்றை தயாரிக்கும் கருத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த நோக்கத்திற்கு Lloyd's Register Asia நிறுவனத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டடுள்ளது. இதற்கிணங்க, உரிய சகல தரப்புக்களுடனும் உசாவுதலைச் செய்து 04 ஒழுங்குவிதிகள் வரையப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வர்த்தக கப்பல் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு உரிய ஒழுங்குவிதிகளை பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வரையப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு சட்டவரைநரின் உடன்பாட்டினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.