• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 500 கொள்கலன்களைப் பயன்படுத்தி திறந்தவௌி உடற்பயிற்சி நிலையங்களைத் (Container Based Cross - Fit Gym) தாபித்தல்
- உற்சாகமான வாழ்க்கை முறைக்கு இளைய தலைமுறையினரை பழக்கப்படுத்துவதற்கும் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்கும் ஊக்கத்தினை வழங்கும் நோக்கில் 'வெற்றி கொள்வோம்' (ஜய கமு) என்னும் தொனிபொருளின் கீழ் கொள்கலன்களை பயன்படுத்தி நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 500 திறந்தவௌி உடற்பயிற்சி நிலையங்களைத் (Container Based Cross - Fit Gym) தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்ட செலவானது 625 மில்லியன் ரூபா ஆவதோடு, கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் வருடாந்தம் அண்ணளவாக 100,000 பொதுமக்களும் 5,000 விளையாட்டு வீரவீராங்கனைகளும் பயன்பெற முடியும். இந்த உடற்பயிற்சி நிலையங்களை நடாத்திச் செல்லும் பொறுப்பினை பிரதேச மட்டத்தில் இளைஞர் கழகங்களுக்கும் விளையாட்டு கழகங்களுக்கும் கையளிப்பதற்கும் ஆகக் குறைந்தது பயிற்சியாளர் ஒருவரை ஈடுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை 2021 - 2022 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதற்கும் 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 250 இடங்களில் உடற்பயிற்சி நிலையங்களை நிர்மாணிப்பதற்குமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.