• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"Smart Sri Lanka” நிகழ்ச்சித்திட்டத்தின் பணிகளை மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்திற்கு கையளித்தல்
- தொழில்சார் வழிகாட்டல்களை தேசிய மட்டத்திலிருந்து பிரதேச மட்டம் வரை ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல், புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி புதிய வழிகளின் கீழ் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் நோக்கில் "Smart Sri Lanka” நிறுவனமானது அப்போதைய சனாதிபதி செயலகத்தின் கீழ் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது தாபிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனமானது தற்போது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் விடயநோக்கெல்லைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. "Smart Sri Lanka” நிறுவனத்தை மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்திற்கு கையளித்து அதன் பணிகளை நடாத்திச் செல்வதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.