• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இந்தியாவின் புதுதில்லி நகரத்தில் அமைந்துள்ள EHL மதியுரை சேவை கம்பனிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
- உபசரணை துறை மற்றும் சுற்றுலா தொழிற்துறை சார்ந்து இளைஞர் யுவதிகளை பயிற்றுவிப்பதற்கு இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனமானது 1966 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு உபசரணை கல்வி வசதிகளை வழங்குவதற்கு இந்த நிறுவனத்தின் மாகாண பாடசாலைகள் அநுராதபுரம், பண்டாரவளை, பல்லேகலே, கொக்கல, இரத்தினபுரி, குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் பாசிக்குடா ஆகிய நகரங்களில் தாபிக்கப்பட்டுள்ளன. இந்த துறைசார்ந்த தனியார் பிரிவு பயிற்சி பாடசாலைகள் தற்போது கூடிய விருத்தியினை பெற்றுள்ள போதிலும் கடந்த 10 வருட காலத்தினுள் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் நன்மதிப்பு படிபடியாக குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் அதன் நன் மதிப்பை மேம்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் குறித்த நிறுவனத்தின் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களின் தரம் தொடர்பிலான ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கு இலங்கையிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தின் தலையீட்டின் மீது இந்தியாவின் புதுதில்லி நகரத்தில் அமைந்துள்ள EHL மதியுரை சேவை கம்பனியின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, EHL மதியுரை சேவை கம்பனியின் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக இந்த நிறுவனத்திற்கும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை செய்துகொள்ளும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.