• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுண் பிளாஸ்ரிக் சார்ந்த ஆராய்ச்சி சம்பந்தமாக ஐக்கிய இராச்சிய மற்றும் வட அயர்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளல்
- நுண் பிளாஸ்ரிக் பாவனையின் மூலமான தாக்கமானது சுகாதாரம், கமத்தொழில், சுற்றுலா போன்ற பல துறைகளில் வியாபித்து செல்கின்றமையினால் இந்த கழிவு பொருட்கள் முகாமைத்துவம் சம்பந்தமாக இலங்கை பல்வேறு நிகழ்ச்சித்திட் டங்களை ஆரம்பித்துள்ளது. இது சார்ந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை நல்குவதற்கு ஐக்கிய இராச்சியத்தின் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து என்பன உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இதன் மூலம் நுண் பிளாஸ்ரிக் சம்பந்தமாக உள்நாட்டு ஆராய்ச்சி / ஆற்றலை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும். இதன்பொருட்டு இரண்டு (02) வருடங்களுக்கு வலுவிலுள்ளவாறு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளதோடு, வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கை சார்பில் உரிய அமைச்சுக்களினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, இந்த உடன்படிக்கையை செய்து கொள்வதற்கும் இலங்கையில் கிடைக்கக்கூடிய ஆராய்ச்சி ஆற்றலை அதிகரித்தல் அடங்கலாக பிளாஸ்ரிக் முகாமைத்துவத்தை குறியிலக்காக கொண்டு இந்த விடயநோக்கெல்லைக்குரிய அமைச்சுக்கள் மற்றும் இந்த அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு இடையிலான குழுவொன்றை நியமிப்பதற்குமாக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.