• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாகன விபத்துக்களை குறைப்பதற்காக சமூகத்தில் விசேட கவனத்தினை ஏற்படுத்துவதற்காக வீதி பாதுகாப்பு வாரமொன்றைப் பிரகடனப்படுத்தல்
- தற்போது நாளொன்றில் வாகன விபத்துக்களின் மூலம் 8 - 10 பேர் வரை மரணிப்பதோடு, அவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாவர். இதன் காரணமாக அவர்களில் தங்கி வாழ்வோர் கவனிப்பாரற்ற நிலைக்கு ஆளாகின்றனர். வருடா வருடம் இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் போக்கினை காட்டுகின்றது. கடந்த ஆண்டில் 2,023 கடும் வாகன விபத்துக்கள் நேர்ந்துள்ளதோடு, இதில் 2,114 பேர் மரணித்துள்ளனர். இந்த விபத்துக்களில் 963 மோட்டார் சைக்கிள் தொடர்புபட்ட விபத்துக்களாவதோடு இதன் காரணமாக 987 பேர் மரணித்துள்ளனர். முச்சக்கர வண்டி மற்றும் லொரி விபத்துக்கள் காரணமாகவும் வருடாந்தம் சுமார் 500 மரணங்கள் நிகழ்கின்றமை அறிக்கை யிடப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வாகன விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும் சர்வதேச தினமான நவெம்பர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து வீதி பாதுகாப்பு தேசிய வாரமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள், சாரதிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர்களுக்கு அறியச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபையானது கவனம் செலுத்தியுள்ளது. இதற்கிணங்க, 2021 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்று கிழமையன்றிலிருந்து செயல் வலுவுக்கு வரத்தக்கதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய வாரமொன்றைப் பிரகடனப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் வருடாந்தம் நவெம்பர் மாதத்தில் வீதி பாதுகாப்பு வாரமொன்றை பெயரிடுவதற்குமாக போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.