• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் யப்பான் ஒகாயாமா பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞான பட்டப் படிப்பு நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- மாணவர்கள், பீட மற்றும் பதவியணியினர் பரிமாறல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல், ஒத்துழைப்பு ரீதியிலான ஆராய்ச்சிகள், மதியுரை மற்றும் கலாசார நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல் அத்துடன் ஆராய்ச்சி தகவல்களை பரிமாறிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் யப்பான் ஒகாயாமா பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞான பட்டப் படிப்பு நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.