• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிகளை சட்டரீதியில் உறுதிப்படுத்துதல்
- அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக 2010 ஆம் ஆண்டில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமானது தாபிக்கப்பட்டடது. தேசிய மனிதவலு மற்றும் தொழில்வாய்ப்பு கொள்கையினைத் தயாரித்து நடைமுறைப்படுத்துதல், தொழில்களை உருவாக்குதலும் மேம்படுத்துதலும், தொழில்சார் வழிகாட்டல்களுக்குரிய பணிகள், தொழிற்சந்தை தகவல்களை ஒன்று திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல், பகிர்ந்தளித்தல் மற்றும் 'ரக்கியா பியச' மூலம் செய்யப்படும் பணிகள் என்பன இந்த திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் தொழில்வாய்ப்பின்மை விகிதாசாரத்தை குறைத்தல், கீழுழைப்பு சேவை நிலையை குறைத்தல், மனிதவலுவினை எதிர்கால போக்குக்கு அமைவாக மாற்றுதல் மற்றும் முகாமித்தல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நோக்கங்களை நிறைவேற்றும் போது இந்த திணைக்களத்திற்கு முறையான சட்ட நிலைமை இருக்க வேண்டியத் தேவை இனங்காணப்பட்டுள்ளதோடு, இதனை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிப்பது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிகளை சட்டரீதியில் தாபிப்பதற்கும் அதற்கான ஏற்பாடுகளை உள்வாங்கி சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.