• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பால் தொழில்முயற்சியாளர் சங்கங்களை பதிவு செய்யும் சட்டமூலமொன்றைத் தயாரித்தல்
- பால் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு மாகாண மற்றும மாவட்ட மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பால் தொழில்முயற்சியாளர் சங்கங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும் அரசாங்க அனுசரணையின் கீழ் செயற்படும் பால் தொழில்முயற்சியாளர்கள் சங்கங்கள் முழுவதும் இணைந்த பொது அமைப்பொன்று செயற்படவில்லை. ஆதலால் பால் தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் போது அத்தகைய கட்டமைப்பொன்றின் கீழ் பிராந்திய, மாவட்ட, மாகாண மற்றும் அகில இலங்கை மட்டத்தில் தனியொரு சட்ட கட்டமைப்பொன்றின் கீழ் பால் தொழில்முயற்சியாளர் சங்கங்களை பதிவு செய்யும் தேவை எழுந்துள்ளது. இதற்கிணங்க, இந்த நோக்கத்திற்காக பால் தொழில்முயற்சியாளர் சங்கங்களை பதிவு செய்யும் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.