• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தைத் திருத்துதல்
- 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்திலுள்ள கடன் மற்றும் பிணை தொடர்பிலான ஏற்பாடுகளைத் திருத்துவதற்கு சட்டமூலமொன்றை வரைவதற்காக 2020 திசெம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் உரிய வரைவானது தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.