• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பௌத்த வௌியீடுகளை பிரசுரித்தல் தொடர்பில் ஒழுங்குறுத்தும் பொருட்டு யாப்பொன்றை ஆக்குதல்
- அரசியலமைப்பின் II அத்தியாயத்தின் 9 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கி பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் முக்கிய கடமையாகும். புனிதமான பௌத்த மதம் மற்றும் பௌத்த வழிமுறைகளை திரிபுபடுத்தி பல்வேறுபட்ட நூல்கள், வௌியீடுகள், இறுவெட்டுக்கள் உட்பட பிற ஆக்கங்கள் வெளியிடப்படுகின்றமை தெரியவந்துள்ளது. ஆதலால் இத்தகைய ஆக்கங்களை ஒழுங்குறுத்தும் ஏற்பாடுகளை உள்ளடக்கி யாப்பொன்றினை ஆக்குவது பொருத்தமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க பௌத்த வௌியீடுகளை பிரசுரித்தல் தொடர்பில் ஒழுங்குறுத்தும் பொருட்டு யாப்பொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.