• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் கடன் உதவியின் கீழ் இலங்கையில் நிலவழி தொலைக்காட்சி ஔிபரப்பினை டிஜிட்டல் மயப்படுத்தும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
- நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு Analog முறையிலிருந்து டிஜிட்டல் முறையாக மாற்றமடைந்து வருகின்றதோடு, இந்த உலகளாவிய போக்குக்கு மாற்றமடைவது அத்தியாவசிய விடயமொன்றாகியுள்ளது. இதற்கிணங்க நாட்டின் தொலைக்காட்சி ஔிபரப்பினை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு பல சந்தர்ப்பங்களில் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியத்தகவாய்வின் பின்னர் இலங்கைக்கு ஏற்றவாறு ISDB - T தொழிநுட்பத்தினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு செல்வதன் மூலம் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அலைவரிசையின் அதிர்வெண் வீ்ச்செல்லையின் ஒருபகுதியை கிராமிய பிரதேசங்களில் இணையத்தள அனுகுகையை அதிகரித்து கம்பிகளற்ற சேவையினை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கிணங்க நவீன தொழிநுட்பத்தினை பயன்படுத்தி இலங்கையின் தொலைக்காட்சி ஔிபரப்பினை டிஜிட்டல்மயப்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினாலும் வெகுசன ஊடக அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.