• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹாடி தொழிநுட்ப நிறுவகத்தை தாபித்தல்
- 1960 இல் நிலவிய அபிவிருத்தி தேவைகளுக்கு ஒருங்கிணைவாக இலங்கையில் முதலாவது பல்நோக்க நீர்த்தேக்க கருத்திட்டமான கல்ஓயா அபிவிருத்தி கருத்திட்டத்தினை நோக்காக கொண்டு, தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு பொறியியல் அறிவினை முறையாகப் பெற்றுக் கொடுப்பதற்காக தொழிநுட்ப பயிற்சி நிறுவனமொன்றாக ஆரம்பத்தில் ஹாடி தொழிநுட்ப நிறுவனமானது ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் இந்த நிறுவனத்தின் கட்டமைப்பும் விடயநோக்கெல்லையும் பல்வேறு விதமாக மாற்றமடைந்துள்ளதோடு, தற்போது இந்த நிறுவனம் பிரதான உயர்கல்வியினை கற்கமுடியாது போன தகைமையுள்ள மாணவர்களுக்கு மாற்று உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய டிப்ளோமா (NVQ - 5) மட்டம் மற்றும் உயர் தேசிய டிப்ளோமா (NVQ - 6) மட்டம் என்பவற்றை வழங்கி ஹாடி தொழிநுட்ப கல்லூரியாகவும இந்த நிறுவனத்தினால் இதற்கு முன்னர் நடாத்தி வந்த NDT கமத்தொழில் பாடநெறியானது இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஹாடி உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டும் இரண்டு நிறுவனங்களாக வெவ்வேறாக நடாத்திச் செல்லப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத் திட்டத்திற்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும் அதேபோன்று பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாய் அமையும் உயர் தொழிநுட்ப அறிவினைக் கொண்ட தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் பொருட்டு இந்த நிறுவனங்களின் கட்டமைப்புகளையும் பாடநெறி உள்ளடக்கங் களையும் மாற்றவேண்டுமென இனங்காணப்பட்டுள்ளமையினால் இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைத்து "ஹாடி தொழிநுட்ப நிறுவனம்" (HIT) என்னும் பெயரில் சுயாதீனமாக நிறுவனமொன்றைத் தாபிப்பதற்கும் இதன் பொருட்டு நிறுவனங்களுக்குரிய சட்டங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.