• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர பல்கலைக்கழகங்களைத் தாபித்தல்
- தொழிற்சந்தையில் அதிக கேள்வி நிலவும் தொழில்களின் தரத்தினை மேம்படுத்துவதற்கு உயர் தொழில்சார் அங்கீகாரம் மற்றும் தேர்ச்சியுடனான உலகளாவிய ரீதியில் போட்டிகரமான மட்டத்தில் தொழில்சார்பாளர்களை உருவாக்குவது காலத்தின் தேவையாக இனங்காணப்பட்டுள்ளது. நாட்டில் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக நுழைவுக்காக தகமைகளைப் பெறும் மாணவர்களிருந்து பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு கிடைக்கப்பெறுவது சுமார் 20 சதவீதத்தினருக்கு மட்டுமேயாவதோடு, இந்த வாய்ப்பு கிடைக்கப்பெறாத குழுக்கள் தொழிநுட்ப மற்றும் தொழில் பயிற்சிகளுக்காக செல்வது கணிசமான மட்டத்தில் காணக்கிடைப் பதில்லை. ஆதலால் உரிய மாவட்டங்களின் உற்பத்தி துறைகளுக்குத் தேவையான தேர்ச்சிகளை விருத்தி செய்து தொழில்வாய்ப்புகளுக்கு ஏற்ற பட்டங்களை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களாக நகர பல்கலைக் கழகங்களைத் தாபிப்பதற்கும் இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.