• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று பரவலை தடுப்பதற்காக மேலும் ஆறு மில்லியன் 'SPUTINK V' தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஏழு மில்லியன் SPUTINK V தடுப்பூசி மருந்தளவொன்று 9.95 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் 69.65 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு கொள்வனவு செய்யும் பொருட்டு 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக இதே விலையில் மேலும் 6 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.