• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021/2022 ஆம் ஆண்டு சார்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை வழங்கும் பொருட்டு ஒப்பந்தங்களை வழங்குதல்
- 2021/2022 ஆம் ஆண்டு சார்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை வழங்கும் பொருட்டு ஒப்பந்தகாரர்களை தெரிவு செய்வதற்கு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2021 ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 2022 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிவரை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட வழங்குநர்களுக்கு உரிய ஒப்பந்தங்களை வழங்குவதற்காக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.