• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் 2020 - 2025 ஒருங்கிணைந்த திட்டத்திலுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு துரித கொள்வனவு வழிமுறையினை நடைமுறைப்படுத்துதல்
- 2020 - 2025 ஒருங்கிணைந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நீர் மற்றும் மலக்கழிவகற்றல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 2021 சனவரி மாதம் 11 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் 78.8 சதவீத வீட்டு அலகுகளின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கினை அடைவதற்கு அனுப்பீட்டு மற்றும் விநியோகம் சார்பில் சுமார் 40,000 கிலோமீற்றர் குழாய்களை வழங்கி பதிப்பதற்கும் தற்போதைய உற்பத்தி ஆற்றலை நாளொன்றுக்கு 2.35 மில்லியன் கனமீற்றர்களால் அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நீர் விநியோக கருத்திட்டங்களில் காணப்படும் சிக்கலான நிலைமையினால் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் பெறுவனவு செயல்முறையானது ஏனைய நிறுவனங்களைவிட அதிக காலமெடுப்பது தெரியவந்துள்ளது. அதனால் நீர் குழாய்கள் மற்றும் பொருத்திகள் என்பவற்றின் பெறுவனவு ஒருங்கிணைந்த முறைமையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கும் இதன் பொருட்டு அலகுக்கான விலை முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் குழாய்களை பதிப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்கும் போதுகூட அலகு விலை முறையினை அறிமுகப்படுத்துவதற்குமாக நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.