• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1996 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க (182 ஆம் அத்தியாயம்) துப்பாக்கி கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
- இறுதியாக 1996 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க (182 ஆம் அத்தியாயம்) துப்பாக்கி கட்டளைச் சட்டத்தை மேலும் திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2007‑06‑13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் காலத்திற்கு காலம் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் காரணமாக சட்டமூலத்தை வரையும் பணிகள் காலதாமதமாகியுள்ளன. தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் உரிய சகல திருத்தங்களையும் உள்ளடக்கி சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.