• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு - கண்டி (A 001) (44+300 கிலோ மீற்றரிலிருந்து 100+000 கிலோ மீற்றர் வரை) வீதியை புனரமைத்தல், விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தலுக்கான நான்கு (04) சிவில் வேலை ஒப்பந்த பொதிகளை கையளித்தல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பு - கண்டி வீதியின் 44 ஆம் கிலோ மீற்றரிலிருந்து 100 ஆம் கிலோ மீற்றர் வரையிலான வீதி பகுதியை புனரமைத்தல், விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தலுக்கான நான்கு (04) சிவில் வேலை ஒப்பந்த பொதிகள் சார்பில் உள்ளூரில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 15 விலைமுன்வைப்பாளர்களினால் 47 விலைமுன்வைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு தெரிவு செய்யப்படும் அனுசரணையான ஆகக்குறைந்த விலையினை முன்வைத்துள்ள விலைமனுதாரர்களுக்கு உரிய ஒப்பந்த பொதிகளை கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.