• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத திணைக்களத்திற்காக Single Sleeper Multiple Tie Tamping இயந்திரமொன்றை வடிவமைத்தல், தயாரித்தல், வழங்குதல், பொருத்துதல், செயற்படுத்துதல் மற்றும் கையளித்தல் என்பவற்றுக்கான பெறுகை
- இலங்கை புகையிரத திணைக்களத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஆற்றலை விருத்தி செய்துகொள்வதற்கும் பராமரிப்பு செலவுகளை குறைத்துக் கொள்ளும் பொருட்டும் Single Sleeper Multiple Tie Tamping இயந்திரமொன்றை வடிவமைத்து கையளிப்பதற்காக சர்வதேச போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய பெறுகையை 4.96 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு M/s Matisa Material Industrial S.A. Switzerland நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.