• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணு பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்திற்கும் யப்பானின் Okayama பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் உயிரியல் விஞ்ஞான பட்டகல்வி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- உயர்கல்வி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகளை விருத்தி செய்துகொள்ளும் நோக்கில் ருகுணு பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்திற்கும் யப்பானின் Okayama பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் உயிரியல் விஞ்ஞான பட்டகல்வி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் இரு தரப்புகளுக்கும் இடையில் மாணவர்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டங்கள், பீடங்களின் பதவியணியினர்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஒத்துழைப்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் அதேபோன்று ஆராய்ச்சி தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஆரம்பத்தில் 05 வருட காலத்திற்கு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை செய்துகொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.