• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நைட்ரிஜன் இரசாயன பசளை பாவனை தொடர்பிலான ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- ஆசிய வலயத்தில் இரசாயன பசளையை (முக்கியமாக நைட்ரிஜன்) முறையாக முகாமிக்கப்படாததன் காரணமாக நிகழும் சுற்றாடல் சேதத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சர்வதேச நைட்ரிஜன் முகாமைத்துவ முறைமைகளுடன் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்சசித்திட்டத்தின் தலைமையில் (International Netrogen Management Systems - INMS) பல்வேறுபட்ட பயிர்ச்செய்கை முறைமைகளில் நைட்ரிஜன் உடனான பசளை பாவனை தொடர்பில் தெற்காசிய வலயத்தினை அடிப்படையாகக் கொண்ட பல்நோக்க ஆராய்ச்சி பிரேரிப்பொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச ஆராய்ச்சி கற்கைகளிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயிர்ச்செய்கை முறைமைகளில் (மரக்கறி - நுவரெலியா மற்றும் கல்பிட்டி) (அரிசி - அநுராதபுரம்) நைட்ரிஜன் சேதம் மற்றும் பசுமை வாயு வௌியேற்றம் தொடர்பிலான தரவுகளை சேகரித்து, இதுபற்றி விவசாயிகளுக்கு அறியச் செய்வித்தல், விவசாயிகளுக்கு மலைநாட்டு வனாந்தரங்களில் குறைந்த தாவர பல்வகைமை மீது வளிமாசடைதலை இனங்காணுதல் மற்றும் நைட்ரிஜன் சேதத்தை குறைக்கும் பொருட்டு சிறந்த நைட்ரிஜன் முகாமைத்துவ முறைமைகளை உருவாக்குவதற்கு விவசாய சமூகத்தையும் தரப்பினர்களையும் அறியச் செய்வித்தல் போன்ற பணிகளை இந்தக் கருத்திட்டத்தின் கீழ் 5 வருட காலப்பகுதிக்குள் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிறுவனத்திற்கும் Global Challenges Research நிதியத்திற்கும் தெற்காசிய நைட்ரிஜன் மத்திய நிலையத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.