• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் ஔடத உற்பத்தி வலயமொன்றைத் தாபித்தல்
- சருவதேச தரங்களுக்கு அமைவாக நாட்டில் உற்பத்தி் செய்யகூடிய சகல மருந்துகளையும் இலங்கையில் உற்பத்தி செய்து உயர் தரம் மிக்க மருந்துகளைக் குறைந்த விலையில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக உள்நாட்டு வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் ஒயாமடுவ 'தெயட்ட கிருள' கண்காட்சி நடாத்தப்பட்ட காணியில் 'அநுராதபுரம் ஔடத உற்பத்தி வலயமொன்றைத்' தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அக்கறையுள்ள தகைமை பெற்ற உள்நாட்டு முதலீட்டாளர் களிடமிருந்து கருத்திட்ட பிரேரிப்புகளைக் கோரி நிபுணர் குழுவொன்றினால் 24 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த முதலீட்டாளர்களினால் சுமார் 28,000 மில்லியன் ரூபா இந்தக் கருத்திட்டத்தின் கீழ் முதலீடு செ்யயப்படவுள்ளது. இதற்கிணங்க, தெரிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு முதல் 5 வருட காலத்திற்கு வரி விலக்குடன் 35 வருடகாலத்திற்கு காணித் துண்டானது குத்தகைக்களிக்கப்படுகின்றது. உத்தேச ஔடத உற்பத்தி வலயத்தினை மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சின் கீ்ழ் திறமுறை அபிவிருத்தி கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.