• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்
- கொழும்பு துறைமுக நகரமாக அழைக்கப்படும் விசேட பொருளாதார வலயமொன்றைத் தாபிப்பதற்கு 2021 01 04 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்காக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வரத்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.