• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம்
- விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் வரி சேகரித்தல், வினைத்திறனுடன் மேற்கொள்ளும் தேவை 2021 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது உத்தேச புதிய சட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் ஏற்பாடுகளின் கீழ் மதுசாரம், சிகரட், வாகனங்கள், தொடர்பாடல் மற்றும் பந்தயம் போன்ற துறைகளுக்குரிய பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி அறவிடப்படுவதை மிகவும் எளிமையாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.