• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏழு மில்லியன் SPUTINK V தடுப்பூசி கொள்வனவு செய்தல்
- COVID - 19 வைரசில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கு இலங்கை மக்களில் 14 மில்லியன் பேர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் ஆரம்ப நடவடிக்கையாக 5 மில்லியன் பேர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. தேசிய மருந்துப் பொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையானது ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட SPUTINK V தடுப்பூசியை இலங்கையில் அவசர பாவனைக்காக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 07 மில்லியன் SPUTINK V தடுப்பூசிகளை 69.65 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.