• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான முதன்மைச் சட்டங்களைத் திருத்துதல்
- இற்றைக்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் சட்டமாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் சம்பந்தமான முதன்மைச் சட்டங்களான மாநகர சபை கட்டளைச் சட்டம், நகரசபை கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் என்பவற்றை இற்றைப்படுத்துவதற்கு சட்டவரைநரினால் உரிய சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலங்களுக்கு மேலும் செய்யப்பட வேண்டிய பல திருத்தங்கள் சட்டமா அதிபரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இந்த திருத்தங்களையும் உள்ளடக்கி தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலங்களை மேலும் திருத்தி அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் 154 எ ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் மாகாண சபைகளின் கருத்துக்களை கோரும் பொருட்டு தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.