• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- தற்காலிகமாக இறக்குமதி இடைநிறுத்தப்பட்ட செரமிக் உற்பத்திகளை 180 நாட்கள் கொண்ட கடன் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கும் பத்திக், கைத்தறி மூலம் நெய்யப்பட்ட துணிகள் மற்றும் ஆடைகள் தவிர பிற சேலை வகைகளை 90 நாட்கள் கொண்ட கடன் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கி 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 2021 02 11 ஆம் திகதியிடப்பட்டதும் 2214/56 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலை இந்த சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.