• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச சொத்துக்கள் பயன்பாட்டு மறுசீரமைப்பு ஆணைக்குழு சட்டம்
- 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேசிய நலன் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் மேம்பாட்டின் பொருட்டு காணிகளும் அடங்கலாக குறைவான பயன்பாடுடைய சொத்துக்களை உச்ச பயனுள்ள வகையில் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டியுள்ளது. முக்கியமாக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள குறைவான பயன்பாடுடைய அரசாங்க காணிகள், பல்வேறு காரணங்களினால் நிர்மாணிப்பு பணிகள் தாமதமாகியுள்ள கூட்டு ஆதனங்கள் மற்றும் குறைவான பயன்பாடுடை காணிகள் அடங்கலாக சொத்துக்களைக் கொண்ட அரசாங்க தொழில்முயற்சிகளை உச்ச பயனுள்ள விதத்தில் பயன்படுத்தும் பொருட்டு பொருத்தமான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவது முன்னுரிமை தேவையொன்றாகும். இதற்கிணங்க, சொத்துக்கள் பயன்பாட்டு மறுசீரமைப்பு ஆணைக்குழு என்னும் பெயர் கொண்ட நிறுவனமொன்றைத் தாபித்து இனங்காணப்படும் குறைவான பயன்பாடுடைய சொத்துக்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு இந்த நிறுவனத்திற்குத் தேவையான சட்ட அதிகாரங்களை வழங்குவதற்கும் இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி சொத்துக்கள் பயன்பாட்டு மறுசீரமைப்பு ஆணைக்குழு சட்டமூலமொன்றைத் தயாரிக்கும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.