• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிர்மாணிப்பு இயந்திரங்கள், உபகரணங்கள், பொருட்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் கொள்வனவும் அவற்றை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குதலு
- அரசாங்கத்தினால் நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், கட்டடங்கள் மற்றும் பிற துறைகள் சார்ந்த அபிவிருத்தி கருத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும், நிர்மாணிப்பு கைத்தொழிலினதும் உள்நாட்டு நிர்மாணிப்பு ஒப்பந்தக்காரர்களினதும் இயலளவை பரிசீலனை செய்யும் போது எதிர்பார்க்கும் விதத்தில் குறித்த அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது கடினமாகலாம் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் இனங்காணப்பட்ட முக்கிய கருத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, இந்தக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மண் அப்புறப்படுத்தும், நிர்மாணிப்பு இயந்திரங்கள், வீதி, கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான இயந்திரசாதனங்கள், மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், சேவைகள் வழங்கும் வாகனங்கள், பராமரிப்பு வாகனங்கள் போன்றவற்றை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்து நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுடமை நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் இந்த நிறுவனங்களின் ஆற்றலினை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு இத்தகைய உபகரணங்களை உற்பத்தியாளர்களினால் உள்நாட்டு முகவர்களுடன் இணைந்து வழங்கும் வழங்குநர்களின் கடன் வசதிகள் வழிமுறையின் கீழ் உரிய பெறுகை நடவடிக்கைமுறையினைப் பின்பற்றி குறித்த இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.