• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய வரி தொடர்பான முன்மொழிவுகளை அமுல்படுத்துதல்
- அதிமேதகைய சனாதிபதி அவர்கள் மக்களுக்கு வழங்கிய உறுதியுரைக்கு அமைவாக எளிய, வௌிப்படைத் தன்மைவாய்ந்த வினைத்திறன் மிக்க வரிமுறையொன்றினை அறிமுகப்படுத்தும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்ட 'பொருளாதார புத்துயிரூட்டல் முன்னெடுப்பு' மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரி மறுசீரமைப்புகள் 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரரிப்புகளுக்கு உரியதாக வரி திருத்தங்களையும் கொள்கை தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சட்டவரைநரினால் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டம் மற்றும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரிச் சட்டம் என்பனவற்றைத் திருத்துவதற்கு சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலங்களுக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இந்த சட்டமூலங்களை வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.