• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரிபீடக பாதுகாப்பு சட்டமொன்றை வரைதல்
- எமது நாடு பௌத்த தர்மத்தின் கேந்திர நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்கி பௌத்த சாசனத்தை பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1956 ஆம் ஆண்டில் 2500 ஆவது ஶ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு திரிபீடகம் சிங்கள மொழிபெயர்ப்புடன் அச்சிடப்பட்டது. திரிபீடகத்தினை பாதுகாக்கும் நோக்கில் 2019 பெப்ரவரி 07 ஆம் திகதியன்று வர்த்தமானி மூலம் திரிபீடகமானது தேசிய மரபுரிமையாக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் அரசாங்கத்தின் அனுமதியின்றி தொகுத்தல், பிழையான வரைவிலக்கணங்களை வழங்குதல் அல்லது மொழிபெயர்த்தல் தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக திரிபீடகத்தை பாதுகாக்கும் நோக்கில் 'திரிபீடக பாதுகாப்பு சட்டமொன்றை' பாராளுமன்றத்தின் ஊடாக அங்கீகரித்துக் கொள்வதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.