• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines Limited கம்பனி சார்பில் சரக்கு விமானமொன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்தல்
- SriLankan Airlines Limited கம்பனி பொருளாதார சிக்கனம் மிக்க பெருமளவு விமானங்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக அண்மைய வருடங்களில் உச்ச இலாபத்தை பெற்று தரும் பயணிகள் விமான போக்குவரத்துச் சந்தை வலையமைப்பின் பால் கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பெறுபேறாக சரக்கு ஏற்றுமதி பணிகளுக்காக ஒத்தாசை நல்குவதற்கு ஏற்ற விமானங்கள் இல்லாமையினால் விமான சரக்குகள் கொண்டு செல்லல் மூலம் உரிய வகையில் பயன்பெறவில்லை. COVID - 19 தொற்று நிலைமை காரணமாக பயணிகள் விமானசேவை மட்டுப்படுத்தப்பட்டதோடு, பெரும்பாலான விமான கம்பனிகள் விமான சரங்குகளை கொண்டு செல்வதன்பால் கவனம் செலுத்தியுள்ளன. SriLankan Airlines Limited கம்பனியானது 26 பயண முடிவிடங்களுக்கு தற்போது சரக்குகளை விமானம் மூலம் கொண்டு செல்வதனை கையாள்கின்றதோடு, தற்போதைய சந்தை மாற்றங்களை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளும் போது பிரதான விமான பாதைகளில் சரக்குகளை கொண்டு செல்லும் சந்தையில் நுழைவதற்கு இது நல்ல சந்தர்ப்பமாக தெரியவந்துள்ளது. ஆதலால், சரக்குகளை கொண்டு செல்லும் கேள்வியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு SriLankan Airlines Limited கம்பனியின் தற்போதைய வர்த்தக கட்டமைப்பினை திறமுறை ரீதியில் மாற்றத்திற்கு உள்ளாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சருவதேச போட்டி கேள்வி வழிமுறையினைப் பின்பற்றி SriLankan Airlines Limited கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் சரக்கு விமானமொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.